சீனாவுக்கு பயணமாகும் ஜனாதிபதி கோட்டாபய - முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் அளவில் இந்த விஜயத்தை அவர் முன்னெடுக்கவுள்ளதாகவும் அதன்போது முக்கியமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் உயர் மட்டக்குழுவின் இலங்கை விஜயத்தின் போது கொரோனா சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சீனா உதவித்திட்டங்களை வழங்கும் என குறித்த குழு தெரிவித்திருந்த நிலையில்,
சீனாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலரை சலுகைக் கடன் ரீதியில் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை விரைவில் கையெழுத்திடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.