ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபரின் நடவடிக்கை

ரியாஜ் பதியுதீனின் விடுதலை தொடர்பில் சட்டமா அதிபரின் நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதினின் சகோதரர் ரியாஜ் பதியூதீன் விடுவிக்கப்பட்ட விடயம் தொடர்பாக சட்ட மா அதிபர் கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்காக நாளை இந்த விசாரணைக்கு பொறுப்பான அதிகாரியையும், குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதி காவற்துறை மா அதிபரையும் சட்டமா அதிபர் அழைத்துள்ளார்

ரியாஜ் பதியூதீன் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், சட்டமா அதிபர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.