மீகஹகிவுல பிரதேச சபையின் முக்கிய தீர்மானம்- சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு..!
பிடமாறுவ- உலக முடிவு பகுதி வளாகத்தில் சுற்றுலா கூடாரங்கள் அமைப்பதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுவரும் அழிவை கருத்திற்கொண்டு மீகஹகிவுல பிரதேச சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தற்காலிக சுற்றுலா கூடாரங்களில் தங்குவதற்காக சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் மக்காத பொருட்களால் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
மேலும் இந்த கூடாரங்களிற்குள் சுற்றுலாப் பயணிகள் மது அருந்துவதாகவும், இதனால் அப்பகுதிக்கு வருகைத் தரும் ஏனைய சுற்றுலாப் பயணிகளுக்கு இது இடையூறாக அமைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.