வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதால் வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரும் இலங்கையர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான கோரிக்கையினை முன்வைத்துள்ளதாக வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.