மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ள தீர்மானம்

மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட மூவருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ள தீர்மானம்

யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டபோது ஊர்காவற்துறை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரும், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நீதவானின் அனுமதியுடன் அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் தடுத்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேநேரம், அனலைதீவு பகுதியில் குறித்த மூன்று நபர்களும் நபர்கள் நடமாடியதாக கருதப்படும் இடங்களில் உள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.