நோயாளர்களை பார்க்க மருத்துவமனை செல்வோருக்கு விசேட அறிவித்தல்

நோயாளர்களை பார்க்க மருத்துவமனை செல்வோருக்கு விசேட அறிவித்தல்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் உள்நோயாளர்களை பார்ப்பதற்காக வெளியிலிருந்து வருபவர்களுக்கு சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, நோயாளர்களை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வருவோர் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமானது எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நோயாளருடன் ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசங்கள் அணிந்திருத்தல் போன்ற விடயங்களையும் கவனத்திற்கொள்ளுமாறும் அவர் அறிக்கையினூடாக கேட்டுக்கொண்டுள்ளார்.

நோயாளர்களை சந்தித்து அவர்களுக்கு பொருட்களை வழங்குவதற்கு பதிலாக, முறையான நடைமுறைகளைக் கடைப்பிடித்து குறித்த பொருட்கள் நோயாளர்களுக்கு சென்றடையும் வகையிலான ஏற்பாடுகளை செய்ய முடியுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அத்தியாவசிய சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக அருகிலுள்ள மருத்துமனைகளுக்கு செல்லுமாறும் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.