20ஆவது திருத்தம் தொடர்பில் சிறுபான்மையினக் கட்சிகளின் நிலைப்பாடு - ஐந்து கட்சிகள் ஆதரவு
ஐந்து சிறுபான்மையினக் கட்சிகள் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமது ஆதரவு தொடர்பில் அரச உயர் மட்டத்திற்கு குறித்த கட்சிகளின் தலைவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தலைமையிலான முற்போக்கு தமிழர் அமைப்பு ஆகிய கட்சிகளே இவ்வாறு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளன.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களிக்கவுள்ள நிலையில், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை இதுவரையில் அறிவிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.