
மன்னார் ஆயர் இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது...!
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மன்னார் ஆயர் இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மன்னார் ஆயர் இல்லத்திற்கு பின்புறம் கட்டிட நிர்மாணிப்பில் ஈடுப்பட்டிருந்த குழுவில் இருந்த ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த கொரோனா தொற்றுறுதியானவருடன் நேரடி தொடர்புடைய 42 பேரும், அவர்களுடன் தொடர்புடைய, 51 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்;;ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர் டி வினோதன் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கான பீ.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தற்காலியமாக இடைநிறுத்தப்பட்டிருந்து பேருந்து சேவைகள் இன்று பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் 200 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கான முடிவுகள் இன்றிரவுக்குள் கிடைக்கப்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், எதிர்வரும் நாட்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய கிழக்கு மாகாணத்தில் நான்கு பிராந்திய வைத்தியசாலைகளை கொவிட் 19 தொற்றுறுதியானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு பயன்படுத்தவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நேற்றைய தினம் 350 பேருக்கான உயிரியல் மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில், அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் வைத்தியர் லதாகரன் குறிப்பிட்டார்.