ஹொரணை வைத்தியசாலை தாதியருக்கு கொரோனா- மூடப்பட்டன இரு விடுதிகள்!
ஹொரணை ஆதார வைத்தியசாலையின் தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து 5 ஆம் மற்றும் 9 ஆம் விடுதிகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அங்கு பணியாற்றும் ஒரு தாதியின் கணவர் மினுவாங்கொடை பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும் அவருக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்கு உள்ளான தாதியர் உள்ளிட்ட தொற்றாளர்கள் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலைக்கும் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா வைத்தியசாலையின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மினுவங்கொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.