கல்வி அமைச்சின் விசேட கலந்துரையாடல்!

கல்வி அமைச்சின் விசேட கலந்துரையாடல்!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் கல்வி அமைச்சில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

பரீட்சை மத்திய நிலையங்கள் செயற்படும் விதம் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, மற்றும் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் உட்பட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித ஆகியோர் தலைமையில் இந்த கலந்துரையாடலில் கொழும்பு களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் பங்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும்  அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள்  தொடர்பில் இதன்போது  விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.