ஆடைத் தொழிற்சாலையில் பரவிய கொரோனா கொத்தணியின் மூலத்தை அறியத் திணறும் மருத்துவர்கள்!

ஆடைத் தொழிற்சாலையில் பரவிய கொரோனா கொத்தணியின் மூலத்தை அறியத் திணறும் மருத்துவர்கள்!

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா கொத்தணியின் மூல ஆரம்பம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் விளக்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,

இலங்கையில் கொரோனா வைரஸ் நோய் சமூகத்தில் பரவியுள்ளமைக்கான தெளிவான அடையாளங்கள் எதுவும் இல்லை. அதேபோல் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா கொத்தணியில் உள்ள அதிகளவானவர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்றைய தினத்தில் மாத்திரம் PCR பரிசோதனைக்கான 6 ஆயிரம் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆடைத் தொழிற்சாலையின் கொரோனா கொத்தணியின் மூல ஆரம்பம் இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டாலும் மக்கள் மருத்துவமனைகளுக்கு வருவதில் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகளில் 2 ஆயிரம் கட்டில்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும், தேவை ஏற்பட்டால் 3 ஆயிரம் கட்டில்களை ஏற்பாடு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.