சிகிச்சைப் பெற்று வரும் குழந்தையின் தந்தைக்கு கொரோனா!

சிகிச்சைப் பெற்று வரும் குழந்தையின் தந்தைக்கு கொரோனா!

கொழும்பு- ரிஜ்வே ஹார்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தையின் தந்தைக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

05 மாத வயதுடைய குறித்த குழந்தை, கடந்த ஓகஸ்ட் மாதம் தொடக்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  வழங்கப்பட்டு வருவதுடன்,  குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் தற்காலிகமாக கொடிகாவத்தை பிரதேசத்தில் தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர்களுக்கு கடந்த தினம், பி.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தந்தைக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைக்கோ அல்லது தாய்க்கோ இதுவரையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த குழந்தை சிகிச்சை பெறும் வார்டின் அனைத்து ஊழியர்களுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரிஜ்வே ஹார்யா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் கண்டி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.