பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு வலியுறுத்தல்!
தேர்தல் மீளாய்வு பத்திரங்களை கையளிப்பதற்காக பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு தேர்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
தேர்தல் மீளாய்வு பத்திரங்களை பூர்த்தி செய்வதற்காக பொதுமக்கள் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்திற்கு வருகை தருவதாக முறைப்பாடுக் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ர்தனாயக்க தெரிவித்துள்ளார்.
எனவே பொதுமக்கள் அதனை தவிர்த்து செயற்படுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை பூர்த்தி செய்யப்பட்ட தேர்தல் மீளாய்வு பத்திரங்களை கிராம உத்தியோகத்தர்கள் வீடுகளுக்கு சென்று அதனை பெற்றுக்கொள்வதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.