கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சமூகத்தில் மேலும் ஒரு நோய் தொற்று..!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சமூகத்தில் மேலும் ஒரு நோய் தொற்று..!

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் டெங்கு ஒழிப்பு வாரம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த நாட்களில் சமூகத்தில் டெங்கு தொற்று அதிகரித்து வருவதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் மாத்திரம் இந்த தொற்றால் 33 மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் டெங்கு தொற்றின் தாக்கம் குறைவடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் 105,049 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பதுடன், இவ்வருடம் 27 ஆயிரத்து 870 தொற்றாளர்கள் மாத்திரமை பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.