நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்..!

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பொழிய கூடும்..!

வடக்கு, வடமத்திய,கிழக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மி.மீ அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் அந்த திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் கன மழை பொழிய கூடும் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது