வழிபாடுகளுக்காக ஒன்று கூடுவதை குறைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை

வழிபாடுகளுக்காக ஒன்று கூடுவதை குறைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை

இலங்கையில் கொவிட் -19 வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் உட்பட ஏனைய மதஸ்தலங்களில் வழிபாடுகளுக்காக ஒன்று கூடுவதை இயலுமானவரை குறைத்துக்கொள்ளுமாறு புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆராதனைகள் முடிந்தளவு குறைக்கப்பட வேண்டுமென்பதுடன், வழிபாடுகளுக்காக செல்லும் போது முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் உட்பட சுகாதார வழிகாட்டல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு வீடுகளுக்கு உள்ளேயே வழிபாடுகளை செய்வது பொறுத்தமானதாக இருக்கும் என்பதுடன், தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.