வெலிசர தொழிற்சாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

வெலிசர தொழிற்சாலையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

வெலிசர பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் கிளையான வெலிசர தொழிற்சாலையில் பணியாற்றிய ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிஉசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 23 ஆக அதிகரித்துள்ளது.