நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க செலவிற்காக 4 ஆயிரத்து 906 பில்லியன் ரூபாவுடன் அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் உத்தேச செலவுகள் அடங்கிய வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் நாளாந்த செலவு 2,690 பில்லியன் ரூபாவாகவும் மூலதன செலவு ஆயிரத்து 146 பில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செலவு மதிப்பீடுகள் மற்றும் கடன் விதிமுறைகளை உள்ளடக்கியதாக நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.