யாழில். டெங்கு பரவும் சூழல் - 8000 ரூபாய் தண்டம்

யாழில். டெங்கு பரவும் சூழல் - 8000 ரூபாய் தண்டம்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பெருக்கத்திற்கு ஏற்றவாறு வீட்டு வளாகத்தினை பேணிய குற்றச்சாட்டில் இரு குடியிருப்பாளர்களுக்கும் 16 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

கரவெட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தின் போது, இரு வீடுகளில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழல் காணப்பட்டதை தொடர்ந்தும் வீட்டின் குடியிருப்பாளர்கள் இருவருக்கும் எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, குடியிருப்பாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களை எச்சரித்த மன்று இருவருக்கும் தலா 08 ஆயிரம் ரூபாய் வீதம் தண்டம் விதித்தது.