மருந்துப் பற்றாக்குறை: நிலைமை மோசமாக உள்ளது என எச்சரிக்கை

மருந்துப் பற்றாக்குறை: நிலைமை மோசமாக உள்ளது என எச்சரிக்கை

2026இற்குள் மருந்துப் பற்றாக்குறை தீரும் என்று சுகாதார அமைச்சு உறுதியளித்த போதும், நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் வர்த்தக சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

பல பெரிய வைத்தியசாலைகளில் நூற்றுக்கும் அதிகமான மருந்துகள் மிகையாக உள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

இந்த மிகை இருப்புக்கு மத்தியில், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நீடிக்கிறது.

IV Noradrenaline, IV Cefotaxime, Levofloxacin போன்ற மருந்துகளும், சத்திரசிகிச்சைக்கான Nylon, Knee Implants போன்ற பொருட்களும் பற்றாக்குறையாக உள்ளது.

இது சுகாதாரத் துறையின் ஆழமான நிர்வாக மற்றும் அரசியல் தோல்வி என்று மருத்துவர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மருந்துப் பற்றாக்குறை: நிலைமை மோசமாக உள்ளது என எச்சரிக்கை | Medicine Shortage In Sri Lanka

முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளே இந்தப் பிரச்சினைக்கு நேரடிப் பொறுப்பாளிகள் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் வர்த்தக சங்கக் கூட்டணியின் தலைவர், வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.