
இலங்கை வாழ் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும், 3 பேர் உயிரிழகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பெண்கள் வைத்திய பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயை விரைவில் கண்டறிதல் மூலம் நோயைக் குணப்படுத்த முடியும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கைப் பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோயாகக் காணப்படுகின்றது.
அதேவேளை, இந்த ஒக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதாந்தம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
20 - 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடாந்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பெண்கள் மார்பகத்தில் கட்டிகள், வலி அல்லது தோல் மாற்றங்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் ஆரம்பகால புற்றுநோய் கண்டறிதல் வைத்தியசாலைகளில் வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.