லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாகத் தடை

லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாகத் தடை

நாட்டில் அஎதிர்வரும் காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படவுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி லஞ்ச் சீட்க்கு மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படுமென்று மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் குறிப்பிட்டுள்ளார்.

லஞ்ச் சீட் பாவனைக்கு முற்றாகத் தடை | Complete Ban On The Use Of Lunch Seats Srilanka

அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாதெனவும் இலவசமாக வழங்கப்படாத பொலித்தீன் கொள்கலன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையைப் பற்றுச்சீட்டில் குறிப்பிட வேண்டுமெனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

அதேவேளை வட மாகாணத்தில் லஞ்ச் சீட் பதிலாக வாழை இலைகளைப் பயன்படுத்துவதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.