
யாழில் இளம் ஆசிரியை பரிதாப உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்
புற்று நோயினால் பாதிக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையை சேர்ந்த இளம் ஆசிரியர் உயிரிழந்துள்ளார் .
சம்பவத்தில் 37 வயதான ஒரு பிள்ளையின் தாயை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார் .
திருகோணமலையை சொந்த இடமாககொண்ட குறித்த ஆசிரியர் யாழ் இளைஞர் ஒருவரை திருமணம் செய்து மூன்று வயது குழந்தையும் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் குறித்த ஆசிரியை இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இளம் ஆசிரியையின் உயிரிழப்பு பருத்தித்துறை பிரதேசத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .