
யாழில் பரபரப்பு ;வீதியால் சென்ற குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு; நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் குரும்சிட்டி, தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியில் இன்று (11) அன்று காலை வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் இந்த வாள்வெட்டு சம்பவத்தினை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பலாவி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா தினேஷ்குமார் வயது 32, பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதேவேளை கடந்த இரு தினங்களின் முன்பும் வீதியால் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்ற நிலையில் மைஇண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.