யாழில் சகோதரனுக்கு உதவ சென்றவர் மரணம்

யாழில் சகோதரனுக்கு உதவ சென்றவர் மரணம்

யாழில் சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்தவர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 43 வயதானவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்வதற்கு சென்ற நிலையில் கூரை வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவேளை கூரை மரம் முறிந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

யாழில் சகோதரனுக்கு உதவ சென்றவர் மரணம் | Man Who Went To Help His Brother In Jaffna Dies

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபப்ட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(08) உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.