கள்ளக் காதலால் நேர்ந்த விபரீதம் ; மனைவியின் தலையை வெட்டி எடுத்த கணவன்

கள்ளக் காதலால் நேர்ந்த விபரீதம் ; மனைவியின் தலையை வெட்டி எடுத்த கணவன்

இந்தியாவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் கிராமத்தில் கணவர் வெளியூர் சென்றதாக நினைத்து கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்தை கண்டு மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் கொடூரமாக இருவரின் தலைகளையும் கணவர் வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொட்டை மாடியில் மனைவியும் , 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளதை கள்ளக்குறிச்சி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, இறந்து கிடந்தவர்களின் சடலங்களை பார்வையிட்டு விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கள்ளக் காதலால் நேர்ந்த விபரீதம் ; மனைவியின் தலையை வெட்டி எடுத்த கணவன் | Cruelty Inflicted By Thief Husband Cut Off Heads

அப்போது இறந்து கிடந்த ஆண் அதே பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில் குறித்த பெண்ணுக்கும் அந்த ஆணுக்கும் இடையே பழக்கம் கள்ளக்காதலாக மாறியது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே உயிரிழந்த பெண்ணின் கணவர் வேலை காரணமாக வெளியூர் செல்லும்போது, இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கணவர் இரவு வெளியூர் செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு அருகில் உள்ள இடத்தில் மறைந்து கொண்டார்.

கள்ளக் காதலால் நேர்ந்த விபரீதம் ; மனைவியின் தலையை வெட்டி எடுத்த கணவன் | Cruelty Inflicted By Thief Husband Cut Off Heads

தனது கணவர் வெளியூர் சென்றதான நினைத்த பெண் தனது கள்ளக்காதலனை செல்போனில் அழைத்து இரவில் இருவரும் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

அப்போது உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆத்திரமடைந்த கணவன் கொடுவாளால் மனைவியையும் அவரது கள்ளகாதலனையும் சரமாரியாக வெட்டினார்.

இந்த தாக்குதலில் இருவரும் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இருப்பினும் ஆத்திரம் தீராத கணவர் இருவரின் தலைகளையும் கொடுவாளால் அறுத்து எடுத்து பஸ் மூலம் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு சென்று சரண் அடைந்துள்ளார்.