
பேராதனை பல்கலைக்கழக மாணவர்களின் விபரீத முடிவு! காரணம் வெளியானது..!
கடந்த 8 மாதங்களில் பேராதனை பல்கலைக்கழகமாணவர்கள் 06 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் நான்கு மாணவர்கள் பொறியியல் பீடத்தை சேர்ந்தவர்கள் எனவும்,மேலும் நான்கு மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றதில் அனைவருக்கும் சமூக தொடர்பு இல்லாததே காரணம் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான பல்கலைக்கழக மாணவர்களின் சகிப்புத்தன்மை குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என கண்டி தேசிய வைத்தியசாலையின் முன்னாள் மனநல வைத்தியர் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பள்ளிப்பருவத்திலிருந்தே குழந்தைகளின் திறன்களை கண்டறிந்து, தகுந்த மனநிலையுடன் பாடத்திட்டம் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு அவர்களை வழிநடத்த அனுமதிக்கவும், விளையாட்டு நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது முடிந்தவரை சமாளிப்பதற்கான தன்மையை வளர்க்கவும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பொதுவாக அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார்கள் என்றும், பரீட்சை குறித்த பயம் ஏற்கனவே உருவாகியுள்ளதென்றும், குழந்தைகளின் மன சுதந்திரத்தில் சிறுவயதிலிருந்தே பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.