ஆசிரியர் வெற்றிடம் - பிரதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் வெற்றிடம் - பிரதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாடாளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வாய்மொழி மீதான விவாதங்களின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கடந்த 2023.01.17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தாலும் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டது.

அதனையடுத்து நீதிமன்றால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட் டிருந்த நிலையில் அதற்கான போட்டிப் பரீட்சை இடைநிறுத்தப்பட்டு தற்போது வரை பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை.

ஆசிரியர் வெற்றிடம் - பிரதி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு | Govt Teacher Vacancies Teachers Salary Increment

நாடளாவிய ரீதியில் 39267 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றது. கல்விச் சுற்றறிக்கையின்படி 2604 வெற்றிடங்கள் அகற்றப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டின் டிப்ளோமா மாகாண பாடசாலைகளுக்கு கடந்த 2025.05.02 ஆம் திகதியிலிருந்து நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் பாடசாலைகளுக்கு 345 நியமனங்களும் தேசிய பாடசாலைகளுக்கு 968 நியமனங்களும் ஆங்கில பாடசாலைகளுக்கு 381 நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன.

Govt teacher

மாகாணங்கள் உள்ளிட்ட அனைத்து நியமனங்களும் சிங்களப் பாடசாலைகளில் - 2281 நியமனங்களும் தமிழ் மொழி பாடசாலைகளில் 1401 நியமனங்களும் ஆங்கில மொழி பாடசாலைகளுக்கு 679 நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளன என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.