ஜனாதிபதியின் சிம்மாசன உரையால் நடுங்கிப்போயுள்ள முன்னாள் அமைச்சர்

ஜனாதிபதியின் சிம்மாசன உரையால் நடுங்கிப்போயுள்ள முன்னாள் அமைச்சர்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதியின் சிம்மாசன உரை மிகவும் பயங்கரமானதாக இருந்தது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரா கூறியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் நியமித்த குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த மங்கள ஜனாதிபதியின் உரை குறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலேயே தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமித்த புதிய விளையாட்டு ஆலோசனைக் குழுவை வாழ்த்திய அவர், சமீப காலங்களில் நியமிக்கப்பட்ட சிறந்த விளையாட்டு ஆலோசனைக் குழு இது என்று கூறியுள்ளார்.

மேலும் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதியின் சிம்மாசன உரை மிகவும் பயங்கரமானதாக இருந்தது என்றும், இது பெரும்பான்மை பார்வையை அடிப்படையாகக் கொண்டது என்றும், இலங்கை பாரிய பின்னடைவுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கூறினார்.