உலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்தது!

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தை கடந்தது!

உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்சத்து 50ஆயிரத்தைக் கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகில் மொத்தமாக ஏழு இலட்சத்து 53ஆயிரத்து 493பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால் இரண்டு கோடியே 10இலட்சத்து 67ஆயிரத்து 520பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஒரு கோடியே 39இலட்சத்து 17ஆயிரத்து 827பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

உலகளவில் அதிக கொவிட்-19 பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது. இதற்கு அடுத்தபடியாக பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.