விபத்தில் ஒருவர் பலி - சாரதி கைது

விபத்தில் ஒருவர் பலி - சாரதி கைது

புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் செங்கல்ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (12) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீரகெலேவத்தை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துச் சம்பவம் இடம்பெற்ற வேளை, சிலாபத்திலிருந்து புத்தளம் பகுதியை நோக்கிச் சென்ற பஸ் ஒன்று, எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை அங்கிருந்தவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.