கருப்பு உடை, வெள்ளை மனசு: ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

கருப்பு உடை, வெள்ளை மனசு: ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழ் திரைப்பட நடிகையும், பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷூட் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவும் இருந்தது என்பதும் ஆனால் கடைசி நேரத்தில் திடீரென அவர் ஆரியை பகைத்து கொண்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ரம்யா பாண்டியனின் சமூகவலைதளத்தில் ஃபாலோயர்கள் குவிந்து வந்தார்கள் என்பதும் அதற்கு ஏற்ப அவர் அடிக்கடி புதிய புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் என்பதும் அவைகளில் பெரும்பாலானவை புகைப்படங்கள் கிளாமராக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் லேட்டஸ்டாக கருப்பு உடையில் எடுக்கப்பட்ட கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கேப்ஷனாக ’கனவுகளைக் கொண்ட சிறுமிகள் அனைவரையும் கவரும் பெண்களாக மாறுகிறார்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.

ரம்யா பாண்டியனின் இந்த போட்டோ புகைப்படங்களுக்கு ’கருப்பு உடையாக இருந்தாலும் வெள்ளை மனசு கொண்ட ரம்யா பாண்டியனுக்கு வாழ்த்துக்கள்’ என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது. இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் நடித்த ’ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வாணிபோஜன் நடித்துள்ளார் என்பதும், சூர்யா மற்றும் ஜோதிகா இந்த படத்தை தயாரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.