
சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2450 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2447 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
குறித்த மூவரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றைய தினம் மாத்திரம் 296 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.