செர்பியாவில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மூன்றாவது இரவாகவும் ஆர்ப்பாட்டம்!

செர்பியாவில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை எதிர்த்து மூன்றாவது இரவாகவும் ஆர்ப்பாட்டம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை அரசாங்கம் கையாளும் விதத்திற்கெதிராக, செர்பியாவில் மூன்றாவது இரவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

முந்தைய இரண்டு இரவுகளும் பொலிஸுடனான வன்முறை மோதல்களால் குறிக்கப்பட்டிருந்தாலும், நேற்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடந்தன.

வைரஸின் இரண்டாவது அலைகளைத் தடுக்க பெல்கிரேட் வார இறுதி ஊரடங்கு உத்தரவை அறிவித்ததன் மூலம் எதிர்ப்புக்கள் தூண்டப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு திட்டங்கள் வியாழக்கிழமை கைவிடப்பட்டன. அதற்கு பதிலாக மதுபானசாலைகள் மற்றும் கடைகளுக்கு குறுகிய நேரம் என மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், செர்பியாவில், வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை, வார இறுதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.