கோவிலில் கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கக்கூடாது ஏன்? பலரும் அறிந்திடாத உண்மை

கோவிலில் கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைக்கக்கூடாது ஏன்? பலரும் அறிந்திடாத உண்மை

ஏன் கடவுளுக்கு சிதறு தேங்காய் உடைக்கப்படுகிறது என்பதையும் கர்ப்பிணிகள் ஏன் தேங்காய் உடைக்கக்கூடாது என்பதையும் தற்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்துக்கள் பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்கள் பின்பற்றுவது வழக்கம். அதில் முக்கியமானதாக, எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன் சிதறு தேங்காய் உடைக்கும் பழக்கத்தை இன்றும் பின்பற்றப்படுவதாக உள்ளது. கடவுளுக்கு சிதறு தேங்காய் ஏன் உடைக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

விநாயகரின் அவதாரம்:

விநாயகர் எடுத்த அவதாரங்களில் ஒன்று தான் மகோற்கடர் என்ற முனிவராக அவதரித்தார். மகோற்கடர் ஒரு முறை காசிப முனிவரின் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். அங்கிருந்து ஒரு யாகத்திற்காகப் புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் ஒரு அசுரன் விநாயகரை தடுத்து திரும்பி சென்று விடுங்கள் என்றார்.

அதனை மறுத்த விநாயகர், அசுரனை தன் வழியிலிருந்து விலகிச் செல்ல கட்டளையிட்டார். ஆனால் அதை கேட்காத அசுரனோ, விநாயகரையும், மற்ற முனிவர்களையும் தாக்க தொடங்கினான்.

உடனே கணபதி யாகங்களுக்காக கொண்டு சென்ற தேங்காயை அசுரன் மீது வீசினார். தேங்காய் சிதறுவது போல அசுரனும் பொடிப்பொடியாக சிதறினான். இதனால் தடைகள் அகன்று யாகத்திற்கு மகோற்கடர் மற்றும் பிற முனிவர்கள் புறப்பட்டனர்.

அன்று முதல் எந்த ஒரு முக்கிய விஷயமாக இருந்தாலும், புதிய செயலை தொடங்குவதாக இருந்தாலும், எங்கு முக்கிய விஷயமாக வெளியே செல்வதாக இருந்தாலும் ஒரு தேங்காயை விநாயகர் கோயிலில் சிதறு தேங்காயாக உடைத்து வணங்கி செல்லும் வழக்கத்தைப் பின்பற்றப்படுகிறது.

விநாயகர் அசுரன் மீது தேங்காயை வீசி எறிந்து தடையை அகற்றினார். அதே போல் நாம் விநாயகர் சன்னதி முன் சிதறு தேங்காய் உடைப்பதன் மூலம் விக்கினங்களை விநாயகர் தகர்த்தெறிவார் என்று நம்பப்படுகிறது.

அன்றிலிருந்து இந்த சிதறு தேங்காய் உடைக்கும் வழக்கம் உருவாகி பின்பற்றப்பட்டு வருகிறது. நாமும் நம் வாழ்வில் உள்ள தடைகள் நீங்க கணபதியை வணங்கி சிதறு தேங்காய் உடைத்து நம் செயலை தொடங்குவோம்.

கர்ப்பிணிகள் தேங்காய் உடைக்கக்கூடாது ஏன்?

தேங்காயைப் போன்றே, கர்ப்பவதியின் கர்ப்பமும். தேங்காய் ஓட்டுக்குள் தேங்காயும், நீரும் இருக்கும். அதே போல கர்ப்பிணியின் வயிற்றில் கருவும், கருவில் உள்ள குழந்தையை சுற்றி நீரும் இருக்கும்.

அதனால் கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கக்கூடாது என பின்பற்றப்பட்டு வருகின்றது.