அதிகரித்தது கோழி இறைச்சி விலை - மூடப்பட்டன விற்பனை நிலையங்கள்

அதிகரித்தது கோழி இறைச்சி விலை - மூடப்பட்டன விற்பனை நிலையங்கள்

நாட்டில் கோழி இறைச்சியின் விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோழி இறைச்சியின் விலை அதிகரித்த நிலையில், அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலையொன்று நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி, தோலுடனான கோழி இறைச்சி 430 ரூபாவிற்கும், தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி 500 ரூபாவிற்கும் விற்பனை செய்ய விலை நிர்ணயிக்கப்பட்டது.

எனினும், நாட்டில் கோழி இறைச்சியின் விலை தற்போது 800 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு விலை சடுதியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், கோழி இறைச்சி விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

எனினும், கோழி இறைச்சி விலையில் எந்தவித மாற்றமும் கிடையாது என கால்நடை, கமத்தொழில் அபிவிருத்தி, பால் மற்றும் முட்டை உற்பத்தி தொழில்துறை அமைச்சர் டீ.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.