அண்ணாத்தா ஷூட்டிங் ஆரம்பம்! – ஹைதராபாத் பறந்த ரஜினிகாந்த்!

பல்வேறு இடையூறுகளால் நிறுத்தப்பட்டிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் ஹைதராபாத் புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக அண்ணாத்த படப்பிடிப்பு பணிகளின் போது அதில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கொரோனா இருந்ததாலும், ரஜினிகாந்தின் திடீர் உடலநல குறைவாலும் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் புறப்பட்டு ஹைதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.