தோல்வி படத்தின் பார்ட் 2 எடுக்கும் தயாரிப்பாளர்… இந்த முறையாவது கைகொடுக்குமா?

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் சிவி குமார் தான் இயக்கிய மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்திய அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் உள்ளிட்ட படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்தவர் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் சி வி குமார். வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கிய அவர் இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் படங்களை தயாரித்து வருகிறார்.

இப்போது அவர் தயாரிப்பில் 5 படங்களுக்கு மேல் உருவாகி வருகின்றன. இந்நிலையில் அவர் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமான மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அந்த படம் ரிலீஸின் போது பெரிதாகக் கவனம் ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.