திருநெல்வேலி - பாற்பண்ணைப் பகுதிகளில் முடக்கம் தொடரும்! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தகவல்

திருநெல்வேலி - பாற்பண்ணைப் பகுதிகளில் முடக்கம் தொடரும்! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தகவல்

யாழ். திருநெல்வேலிச் சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்பே - சந்தை, கண்காணிப்பு வலையமாகவுள்ள பாற்பண்ணைப் பகுதிகளை மீளத் திறப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

மிக விரைவில் 2ஆம் கட்ட பிசிஆர் பரிசோதனைகள், சந்தை வர்த்தகர்கள் மற்றும் சந்தையைச் சூழவுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் பெறப்பட்டதன் பின்பே முடக்கம் தளர்வு தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும் என பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.