மூன்று மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து இராணுவ அதிகாரி உயிரிழப்பு

மூன்று மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து இராணுவ அதிகாரி உயிரிழப்பு

பிலியந்தலை, பாடசாலை வீதியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டடத்திலிருந்து வீழ்ந்து இராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கண்டி, அலவதுகொடை - மாருபன பிரதேசத்தில் வசித்து வந்த 42 வயதுடைய அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து மூன்று மாடிக் கட்டத்தின் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளையிலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

மேற்படி விபத்தின் பின் இவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் உயிரிழந்துள்ளார்