இன்றைய ராசி பலன்கள்04/12/2020

இன்றைய ராசி பலன்கள்04/12/2020

மேஷம்

கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். எடுத்த காரியத்தை உடனே செய்து முடிக்க உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர்.

ரிஷபம்

பாராட்டும் புகழும் கூடும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வருமானம் திருப்தி தரும். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

மிதுனம்

குடும்ப ஒற்றுமை கூடும் நாள். கொடுத்த கடன்கள் வசூலாகும். மாமன், மைத்துனர் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்

பயணங்களால் பலன் கிட்டும் நாள். தொழில் வளர்ச்சிக்கு அரசியல் பிரமுகர்கள் உதவுவர். செல்வாக்கு மேலோங்கும். நீங்கள் பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடிவரலாம்.

சிம்மம்

வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலம் தரும். திடீர் பணவரவு மனதிற்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு.

கன்னி

புதிய பாதை புலப்படும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் அருகில் இருந்து ஒத்துழைப்புச் செய்வர். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை மேற்கொள்வீர்கள்.

துலாம்

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.

விருச்சிகம்

வியக்கும் செய்தி விடிகாலையிலேயே வந்து சேரும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள்.

தனுசு

யோகங்கள் வந்து சேர யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளில் சிறு, சிறு தடைகள் ஏற்பட்டு விலகும். மனஉளைச்சல் உண்டு.

மகரம்

கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். இளைய சகோதரத்துடன் ஏற்பட்ட பகை மாறும். வாகன யோகம் உண்டு.

கும்பம்

உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

மீனம்

பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். கடிதம் கனிந்த தகவலைத் தரும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள்.