அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் காலமானார்

அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் காலமானார்

கதாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.ஆர்.சச்சிதானந்தம் என்ற சச்சி. இவர் சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தை இயக்கினார். பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்த இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

48 வயதாகும் இயக்குநர் கே.ஆர்.சச்சிதானந்தம் சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவருக்கு திடீரென இதயத்துடிப்பில் பிரச்னை ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்திருக்கிறார். இவர் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.