கொரோனா காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வந்த 63 இலங்கையர்கள் மரணம்
இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வருபவர்களில் 63 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் நூற்றுக்கு 50 வீதமான மரணங்கள் சவூதி அரேபியாவில் பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் பிரதி முகாமையாளரும் ஊடக செய்தித் தொடர்பாளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.