அதிகரித்து வரும் டெங்கு தொற்று..!

அதிகரித்து வரும் டெங்கு தொற்று..!

நாட்டில் இந்த வருடத்தின் கடந்த 9 மாத காலப்பகுதியில் 27 ஆயிரத்து 798 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

அதில் அதிகளவானோர் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்ப பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் மாத்திரம் ஆயிரத்து 68 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே டெங்கு நுளம்புகள் பரவாதவாது வீடுகளையும் அதனை அண்டி பகுதிகளையும் சுத்தமாக பேணுமாறு தொற்று நோய் தடுப்பு பிரிவு பொது மக்களிடம் கோரியுள்ளது.