எதிர் கட்சி உறுப்பினர்கள் ஐவர் 20வது திருத்தத்திற்கு ஆதரவு?
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் கொண்டுவந்துள்ள 20 திருத்தச் சட்டமானது நிறைவேற்றப்படும் என்று அரச தரப்பினர் நம்பிக்கையில் இருக்கின்றனர். எனினும் எதிர் கட்சி உறுப்பினர்களின் ஆதரவும் இதற்கு தேவை என்கிற கோணத்தில் அரசாங்கம் இதனை அணுகுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பில் கொழும்பு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
எதிர் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யின் பசில் ராஜபக்ஷ மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தவலை வெளியிட்டுள்ளன.
குறித்த அறிக்கையின்படி, இந்த திருத்தத்திற்கு ஆதரவு வழங்க எதிரணியின் சிறுபான்மை கட்சிகளின் பல உறுப்பினர்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் முடிவு களின்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 இடங்களை வென்றுள்ளது, அவர்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் உறுப்பினர்கள் சேர்க்கப்படும்போது, அரசாங்கத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை 150 ஆகும்.
இருப்பினும், சபாநாயகர் மஹிந்தா யப்பா அபேவர்தன சபாநாயகர் பதவிக்கு நியமிக்கப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியில் தற்போதைய ஆசனங்களின் எண்ணிக் கை 149 ஆகவுள்ளது. அதன் படி குறித்த திருத்தத்தை நிறைவேற்ற மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவைப் பெற்றுக் கொள்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.