பேருந்தில் பயணித்த அரச அதிகாரிக்கு பாலியல் துன்புறுத்தல்
களுத்துறை - அலுத்கம இடையிலான பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த அரச அதிகாரி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அலுவலர் அலுத்கம பொலிஸில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
இதில் சந்தேகத்தின் பேரில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டு களுத்துறை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபர் கிதுல்கல பகுதியில் வசிக்கும் 24 வயதுடையவர். இவர் பானந்துறையில் உள்ள ஒரு சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிகிறார்.
இதில் 49 வயதான திருமணமான இரு பிள்ளைகளின் தாயே பாதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் சந்தேகநபர் பல முறை அதிகாரியின் உடலைத் தொட்டிருந்தார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.