காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மேலும் ஒருவர் பலி

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி மேலும் ஒருவர் பலி

இன்று 12 மணியுடன் நிறைவடைந்த கடந்த 18 மணிநேரத்தில் பொலனறுவை மாவட்டத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் முதலாவது மரணம் மெதிரிகிரிய பிரதேச்தில் இடம்பெற்றது.

இதன்போது, 73 வயதுடைய பெண்ணொருவர் பலியானார்.

உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்வாறு காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இன்று காலை லங்காபுர-குடா படுணுகம பிரதேசத்தில் மேலும் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாதத்தில் மாத்திரம் வடமத்திய மாகாணத்தில் மாத்திரம் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.