
நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் ஆய்வு!
துஷ்பிரயோகத்தை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலையைக் கொண்ட சிறுவர்கள் உள்ள வீடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகக்கூடிய வீடுகள் மற்றும் இடங்களை வரைபடத்திற்கு உட்படுத்துவதே இதன் நோக்கம் என சிறுவர் மற்றும் மாகளிர் அபிவிருத்தி, ஆரம்ப பாடசாலை, பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். சிறுவர்கள் பாராமரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பிலும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.