கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 20 பேர்

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 20 பேர்

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 20 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,230 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 297 பேர் இன்று தனிமைப்படுத்தலை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இதன்படி, இதுவரையில் 75 தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து 46 ஆயிரத்து 330 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அதேநேரம் 6 ஆயிரத்து 882 பேர் தொடர்ந்தும் குறித்த நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொவிட் 19 க்காக 2 இலட்சத்து 84 ஆயிரத்து 59 பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 3 ஆயிரத்து 210 பேர் இதுவரையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தநிலையில், 140 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.