பிரித்தானிய நிறுவனம் ஒன்றிடம் நட்டஈடு கோரவுள்ள இலங்கை சுங்க பிரிவு

பிரித்தானிய நிறுவனம் ஒன்றிடம் நட்டஈடு கோரவுள்ள இலங்கை சுங்க பிரிவு

சர்வதேச விதிகளை மீறி 263 கழிவு கொள்கலன்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமைக்காக பிரித்தானியாவில் உள்ள அதனுடன் தொடர்புடைய நிறுவனத்திடம் நட்டஈடு கோரவுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் குறித்த நட்டஈட்டினை அறவிடப்படவுள்ளதாகவும் சுங்கபிரிவின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

பிரித்தானியாவில் உள்ள குறித்த நிறுவனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இலங்கைக்கு வந்த கழிவு கொள்கலன்களில் 21 கொள்கலன்கள் மீண்டும் அண்மையில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

சர்வதேச நியதிகளை மீறி 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு 263 கழிவு கொள்கலன்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், அவற்றில் எஞ்சியுள்ள 242 கழிவு கொள்கலன்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கபிரிவின் உயர் அதிகாரி தெரிவித்தார்.